ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப் பட்டியலில் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடத்தை பெற்றுக் கொள்ளும். தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.