ஸ்ரீ அரசின் கிபிர் தாக்குதலில் 500 இற்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியானார்கள்!

இறுதி யுத்­தத்தின் போது மக்கள் நிறைந்­தி­ருந்த பகு­தி­க­ளினை இலக்கு வைத்து இரா­ணு­வத்­தினால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட கண்­மூ­டித்­த­ன­மான கிபீர் குண்டுத் தாக்­கு­தலில் 500 ற்கும் மேலான பொது மக்கள் உடல் சிதறி உயி­ரி­ழந்­தனர். இந்­நி­லையில் என்­னோடு ஒன்­றாக நின்ற எனது மகன் காணா­மல்­போ­யி­ருந்தார். அவர் எங்கே என தேடி­ய­போதும் காண­வில்லை. இந்­நி­லையில் சித­றிக்­கி­டந்த சட­லங்­க­ளையும் தேடிப்­பார்த்தேன்.

அங்கும் மகன் கிடைக்­க­வில்லை என்று பர­ண­கம ஆணைக்­குழு முன் தாய் ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.அத்­துடன் காணா­மல்­போன பிள்­ளைகள் தொடர்பில் இ பி டி பி ­யி­ன­ரி­டமே கேளுங்கள். அவர்கள் உங்கள் பிள்­ளை­களை தரு­வார்கள்.

அத்­துடன் பிள்­ளைகள் தொடர்­பான மர­ண­சான்­றி­தழ்­களை பெற்­றுக்­கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் காலப்­ப­கு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த காணாமல் போனோர் தொடர்­பாக கண்­ட­றியும் ஆணைக்­குழு அதி­கா­ரிகள் தெரி­வித்­த­தா­கவும் மற்­று­மொரு தாயார் ஆணைக்­கு­ழு­விடம் நேற்று சாட்­சியம் அளித்தார்.

காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அமர்­வுகள் நேற்­றைய தினம் வேலணைப் பிர­தேச செய­லக கேட்போர் கூடத்தில் ஐந்து பிரி­வு­க­ளாக இடம்­பெற்­றன. இதன்­போதே அமர்­வு­களில் கலந்­து­கொண்ட தாய்மார் மேற்­கண்­ட­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார்.

அல்­லைப்­பிட்­டியை சொந்த இட­மாகக் கொண்ட திரு­மதி. சும­னதாஸ் யேசு­ரட்ணம் என்னும் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்..

நாங்கள் காணா­மல்­போன மூன்று பிள்­ளைகள் அடங்­க­லாக அல்­லைப்­பிட்­டியில் குடும்­ப­மாக வசித்து வந்­தி­ருந்தோம். 1990 ஆம் ஆண்டு ஆவனி மாதம் 25 ஆம் திகதி எமது பகு­தியில் இடம்­பெற்ற இரா­ணுவ சுற்­றி­வ­ளைப்­பின்­போது எனது மகன்­க­ளான விஜ­ய­ரட்­ணம்­ரவி, சுகிர்­த­ரட்ணம் ரகு, பிரே­ம­ரட்ணம் ரதன் ஆகிய மூவர் உட்­பட அப்­ப­கு­தியைச் சேர்ந்த 15 வய­துக்கும் 45 வய­துக்கும் இடைப்­பட்ட 600 பேர் பிடித்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

அவ்­வாறு பிடித்துச் செல்­லப்­பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் எனது இரண்­டா­வது மகனும் மூன்­றா­வது மகனும் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். மூத்­த­மகன் விடு­விக்­கப்­ப­டாத நிலையில் அப்­போது ஏற்­பட்ட இடப்­பெ­யர்வில் நாம் மண்­கும்பான் நோக்கி இடம்­பெ­யர்ந்­தி­ருந்தோம். இவ்­வாறு இருக்கும் போது அக் காலப்­ப­கு­தியில் இரா­ணுவ கட்­டளைத் தள­ப­தி­யாக இருந்த கொப்­பேக்­க­டு­வ­விடம் சென்று இரா­ணுவ சுற்­றி­வ­ளைப்பின் போது எனது மகன் பிடித்துச் செல்­லப்­பட்­டுள்ளார் அவரை தயவு செய்து எம்­மிடம் திருப்­பித்­தா­ருங்கள் எனக் கேட்­டி­ருந்தோம். அதற்கு அவர் உங்­க­ளு­டைய மகனை மீட்டுத் தருவோம் என பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இதற்குப் பின்னர் ஈ.பி.டி.பி. கட்­சி­யி­ன­ரிடம் சென்று எமது மகன் இரா­ணுவ சுற்­றி­வ­ளைப்­பின்­போது பிடிக்­கப்­பட்­ட­தா­கவும் அவரை மீட்­டுத்­த­ரு­மாறும் கோரி­யி­ருந்தோம்.

இத்­த­கைய நிலையில் 1990 புரட்­டாதி மாதம் 23 ஆம்­தி­கதி விடு­விக்­கப்­பட்ட இரண்டு மகன்­களும் மீண்டும் இடம்­பெற்ற இரா­ணுவ சுற்­றி­வ­ளைப்பின் போது இரா­ணு­வத்­தி­னரால் பிடித்துச் செல்­லப்­பட்­டனர்.

பிடித்துச் செல்­லப்­பட்ட எனது மூன்று மகன்­க­ளையும் மீட்­டுத்­த­ரு­மாறு பல­ரிடம் நாம் கோரி­யி­ருந்தோம். எனினும் எத்­த­கைய பதிலும் கிடைக்­கப்­பெ­றாத நிலையில் மீண்டும் கொப்பேக் கடு­வ­விடம் சென்று எனது மூன்று பிள்­ளை­க­ளையும் இரா­ணு­வத்­தி­னரே பிடித்துச் சென்­றுள்­ளனர் என முறை­யிட்­டி­ருந்தேன். அதற்கு அவர் ஊர்­கா­வற்­றுறை சென்று பார்­வை­யிட்­டதன் பின்னர் பதில் கூறு­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் அவ­ரி­ட­மி­ருந்து எமக்­குப்­பதில் எதுவும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

காலப்­போக்கில் திரு­கோ­ண­மலை சி.எம்.பி.இரா­ணுவ முகாமில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உணவு வழங்கும் பட்­டி­யலில் என்­னு­டைய மூன்று பிள்­ளை­களின் பெயர் விப­ரங்கள் காணப்­பட்­ட­தாக எனக்கு வேறு ஒரு வழி­யூ­டாக தகவல் கிடைத்­தது. அத் தகவல் வழி­யூ­டாக அந்த பெயர் விப­ரப்­பட்­டி­யலை நான் பெற்­றி­ருந்தேன். அதில் என்­னு­டைய மூன்று பிள்­ளை­களின் பெயரும் காணப்­பட்­டி­ருந்­தன. எனினும் அத்­த­கைய எம்மால் அந்தக் காலப்­ப­கு­தியில் செல்­வ­தற்­கான அனு­மதி எமக்கு கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

அத்­துடன் அந்த முகாமில் ஒரு நாளே எமது பிள்­ளை­களைத் தடுத்து வைத்­தி­ருந்­துள்­ளார்கள் என்­பதை பின்னர் நான் அறிந்து கொண்டேன். இத்­த­கைய நிலையில் மீண்டும் நாட்டில் ஏற்­பட்ட போர்ச் சூழ­லினால் இடப்­பெ­யர்வின் நிமித்தம் வன்னிப் பகு­திக்குள் சென்­றி­ருந்தோம். நாம் வன்­னிப்­ப­கு­தியில் வாழ்ந்­து­வரும் காலப்­ப­கு­தியில் 1996 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் பணிப்பின் பேரில் யாழ்ப்­பா­ணத்தில் காணாமல் போனேர் தொடர்­பான பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

குறித்த பதிவு இடம்­பெறும் திக­திக்குள் சமூ­க­ம­ளிக்க முடி­யாத நிலையில் அந்த ஆண்டு ஆனி­மாதம் 12 ஆம் திக­தியே யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து குறித்த சாட்­சி­யத்தில் எனது பிள்­ளைகள் தொடர்பில் பதி­வினை வழங்­கி­யி­ருந்தேன். இதன் போது சாட்­சி­யங்­களை பதிவு செய்த அதி­கா­ரிகள் இரா­ணு­வத்­தி­னரால் பிடித்துச் செல்­லப்­பட்ட உங்கள் பிள்­ளைகள் ஈ.பி.டி.பி கட்­சி­யி­ன­ரி­டமே உள்­ளனர் எனவும் அவர்­க­ளிடம் சென்று கேளுங்கள் என தெரி­வித்­தனர்.

அத்­துடன் காணா­மல்­போன பிள்­ளைகள் தொடர்பில் இறப்புச் சான்­றி­தழைப் பெற்­றுக்­கொள்ள வேண்டாம் எனவும் ஏனெனில் அவர்கள் உயி­ரோ­டுதான் இருக்­கி­றார்கள் எனவும் அந்த அதி­கா­ரிகள் என்­னிடம் வாக்­கு­றுதி வழங்­கினர்.

இதன் பின்னர் ஈ.பி.டி. செய­லாளர் நாய­கத்தை சந்­திப்­ப­தற்கு பல தட­வைகள் முயற்­சித்­த­போதும் சந்­தர்ப்பம் எனக்கு கைகூ­ட­வில்லை. இவ்­வாறு நீண்ட காலம் பிள்ளைப் பிடி­கொ­டுத்த எமக்கு கண்­ணீரே மீத­மா­க­வுள்­ளது. சாட்­சி­யங்­கள்­தோறும் எமது பதி­வுகள் பதி­யப்­ப­டு­கின்­றன. எனினும் எத்­த­கைய முடி­வு­களும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தயவு செய்து காணா­மல்­போன பிள்­ளை­களை ஒரு தட­வை­யேனும் எனக்குக் காட்­டி­வி­டுங்கள் என அந்த தாய் கண்­ணீ­ரோடு சாட்­சி­ய­ம­ளித்தார்.

கூட்­ட­மைப்­பிற்கு ஆர­வாகச் செயற்­பட்­ட­மையால் மகன் கடத்­தப்­பட்டார் வேலணை 6ஆம் வட்­டாரப் பகு­தியைச் சேர்ந்த சதா­சிவம் செட்­டிச்சி எனும் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ள­னாக செயற்­ப­டக்­கூ­டாது என ஈழ­மக்கள் ஜன­நா­ய­கக்­கட்­சியின் உறுப்­பினர் அச்­சு­றுத்­திய நிலை­யி­லேயே எனது மகன் காணாமல் போயுள்ளார் .

எனது மகன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ள­னாக செயற்­பட்டு வந்­தி­ருந்தார். இந்­நி­லையில் குறித்த கட்­சி­யி­னோடு எந்­த­விதத் தொடர்­பு­க­ளையும் மேற்­கொள்ளக் கூடாது என எனது மகன் கடத்­தப்­ப­டு­வ­தற்கு ஒரு வரு­டத்­திற்கு முன்னர் இருந்தே வேலணைப் பிர­தே­சத்தின் ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் அமைப்­பா­ள­ராக செயற்­பட்டு வந்த ராம் தோழர் என அழைக்­கப்­பட்­டவர் அச்­சு­றுத்தி வந்தார். அத்­துடன் அத்­தோழர் என்­னிடம் வந்து எனது மகனை குறித்த கட்­சிக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­ட­வேண்டாம் எனவும் அச்­சு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் 2011 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 21 ஆம் திகதி அதி­காலை 2.45 மணி­ய­ளவில் மோட்டார் சைக்­கிளில் எமது வீட்­டுக்கு வந்த இருவர் உங்­க­ளு­டைய மகனை சந்­திக்­க­வேண்டும் அவரை வெளியே வரு­மாறு கூறி­யி­ருந்­தனர். நானும் எனது மகனின் நண்­பர்கள் தான் என நினைத்து அவர்­களை வெளியே நிற்க விட்டு எனது மகனைக் அழைத்தேன். மகன் வெளியே வர குறித்த இரு­வரும் அவரை வெளியே அழைத்துக் கொண்டு சென்­றனர்.

வந்­த­வர்கள் யாரெனப் பார்ப்­ப­தற்­காக விளக்­கினை ஒ ளிக்கச் செய்ய முற்­பட்­ட­போது குறித்த இரு­வரும் எனது மகனை மோட்டார் சைக்­கிளில் ஏற்­றிக்­கொண்டு மேலும் பல மோட்டார் சைக்­கிள்­க­ளுடன் சென்­றி­ருந்­தனர். என்னால் அந்த இரவு நேரத்தில் வந்­த­வர்கள் யார் என்­பதை அடை­யாளம் காண­மு­டி­ய­வில்லை.

இத­னை­ய­டுத்து விடிந்­ததும் குறித்த ராம் தோழ­ரிடம் சென்று எனது மகன் எங்கே எனக் கேட்­டி­ருந்தேன். அதற்கு அவர் உங்­க­ளு­டைய மகன் எங்­குள்ளார் என்­பது எனக்குத் தெரி­யாது என பதி­ல­ளித்­தி­ருந்தார்.

எனவே என்­னு­டைய மகனை அச்­சு­றுத்­திய ராம்­தோ­ழரே கடத்­தி­யி­ருப்பார் என குறித்­ததாய் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதே­வேளை தனது மகன் தன்­னுடன் இல்­லாத நிலையில் பல்­வேறு வகை­யான துன்­ப­து­ய­ரங்­களை அனு­ப­வித்து வரு­வ­தா­கவும் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­தினை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான உத­வி­களை வழங்­க­வேண்டும் எனவும் தமி­ழத்­தே­சியக் கூட்­ட­மைப்­பிடம் தான் கோரி­ய­தா­கவும் அதற்கு அவர்­க­ளி­ட­மி­ருந்து சாத­க­மான பதில் இது­வரை கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனவும் சாட்­சி­யத்தில் குறித்த தாய் தெரி­வித்தார். இதன்­போது ஆணைக்­கு­ழுவின் அதி­காரி குறித்த தாயின் கூற்­றுக்­களைப் பதிவு செய்­து­கொண்­டதன் பின்னர் மகன் தொடர்­பான தேடு­தல்­களை மேற்­கொள்ள உங்­க­ளு­டைய பதி­வுகள் முக்­கி­ய­மா­னது என குறிப்­பிட்டார்.

சட­லங்­க­ளுக்­குள்ளும் எனது மகன் இல்லை நெடுந்­தீவுப் பகு­தியைச் சேர்ந்த விக்டர் ஜேசு­தாஸன் மோட்ஷா இன்பம் என்ற தாயார் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்..

இறுதி யுத்­தத்தின் போது மக்கள் நிறைந்­தி­ருந்த பகு­தி­க­ளினை இலக்கு வைத்து இரா­ணு­வத்­தினால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட கண்­மூ­டித்­த­ன­மான கிபிர் குண்டுத் தாக்­கு­தலில் 500 ற்கும் மேலான பொது மக்கள் உடல் சிதறி உயி­ரி­ழந்­தனர். இந்­நி­லையில் என்­னோடு ஒன்­றாக நின்ற எனது மகன் காணா­மல்­போ­யி­ருந்தார். அவர் எங்கே என தோடி­ய­போதும் காண­வில்லை. இந்­நி­லையில் சித­றிக்­கி­டந்த சட­லங்­க­ளையும் தேடிப்­பார்த்­ததேன். அங்கு மகன் கிடைக்­க­வில்லை. எனவே எனது மகன் பிடித்துச் செல்­லப்­பட்­டுள்ளார் என்­ப­தையே ஊகித்­துக்­கொண்டேன்.

இறுதி யுத்­தத்தின் போது சர­மா­ரி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட வான்­தாக்­குதல், மற்றும் துப்­பாக்கி பிர­யோ­கங்­க­ளினால் நாளுக்கு நாள் இடம்­பெ­யர்ந்து சென்று கொண்டே இருந்தோம்.

இவ்­வாறு இடம்­பெ­யர்ந்து செல்லும் போது மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து சென்று வெட்ட வெளி­க­ளுக்குள் தரப்­பாள்­களை கட்­டு­விட்டு தங்­கி­யி­ருந்தோம்.

இந்­நி­லையில் 2009 ஆம் ஆண்டு பங்­குனி மாதம் 22 ஆம் திகதி புது­மாத்­தளன் பகு­தியில் நாங்கள் தரப்பாள் கொட்­டிலில் இருந்த போது இரா­ணு­வத்தின் கிபிர் தாக்­குதல் எங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதனால் தரப்பாள் கொட்டில்களில் இருந்த நாங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியில் ஓடிச் சென்றோம். நீண்ட நேரமாக தொடர்ந்த குண்டுத்தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது எங்களின் குடும்பத்தின் அங்கத்தவர்களை தேட ஆரம்பித்தோம். ஏராளமான மக்கள் மத்தியிலும், நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு மத்தியிலும் காணமல் போன எனது மகனான உசாந்தனை தேடி அலைந்தேன். இங்கு விதைக்கப்பட்டிருந்த பிணங்களுக்குள் எனது மகனை தேடுவதற்குள் அடுத்த கட்ட கிபிர் தாக்குதல் மீண்டும் மக்கள் இருந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

அத்தாக்குதலிலும் பலர் கொல்லப்பட்டார்கள். இறுதியாக மாலை வரைக்கும் கிபிர் தாக்கதல் மேற்கொள்ளப்பட்டிருந்து. அன்றைய தாக்குதலில் உடல்கள் சிதறி உயிரிழந்து கிடந்த ஒவ்வொரு சடலமாக புரட்டிப் பார்த்தேன் அதில் என்னுடைய மகள் இல்லை. எனவே என்னுடைய மகன் பிடித்து செல்லப்பட்டிருக்கலாம் அல்லது செல்தாக்குதலுக்குப் பயந்து எங்காவது சென்றிருக்கலாம் என்ற நிலையில் குண்டுத்தாக்குதலுக்கு மத்தியிலும் 15 நாட்கள்வரை எனது மகனைத் தேடித்திரிந்தேன். எனினும் அவர் மீண்டுவரவில்லை என அவர் சாட்சியமளித்திருந்தார்.

கிபிர்தாக்குதல்படுகொலைஸ்ரீலங்கா அரசு
Comments (0)
Add Comment