2014இல் 3 தற்கொலை அங்கிகள் 300 குண்டுகள் மீட்கப்பட்டது!

கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று தற்­கொலை அங்­கிகள், 3000 குண்­டுகள், 6 சயனைட்வில்­லைகள் கண்­டு­பிடிக்­கப்­பட்­டன. அப்­ப­டி­யென்றால் அக் கால­கட்­டத்­திலும் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் இருந்­ததா? உளவுப் பிரி­வினர் பல­வீ­ன­ம­டைந்­தி­ருந்­த­னரா ? என ஸ்ரீலங்காவின் பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் என்ற கட்­டுக்­கதை பரப்­பப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்­பாக ஸ்ரீலங்கா பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

நாட்டின் தேசிய பாது­காப்பும், வடக்கில் தற்­கொலை அங்கி மற்றும் ஆயுதம் கண்­டு­பி­டிப்பு என்­பதும் இரு­வேறு விட­யங்­க­ளாகும். எனவே இதனை திரி­பு­ப­டுத்தி நாட்டின் பாது­காப்­பிற்கு ஆபத்து என பிர­சாரம் செய்து அர­சுக்கு நெருக்­க­டி­யினை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்­திலும் இவ்­வா­றான பெருந்­தொ­கை­யான ஆயு­தங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே எவரும் எத­னையும் கூற­மு­டி­யாது. அவ்­வா­றா­ன­தொரு நிலைமை நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எவ­ரையும் கடத்திச் சென்று தண்­டனை வழங்­கு­வ­தில்லை.

எனவே ஒவ்­வொ­ரு­வரும் தத்­த­மது தனிப்­பட்ட நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப செயற்­ப­டு­கின்­றனர். இன்­றைய ஆட்­சியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் மிகைப்­ப­டுத்தி செய்திகளை வெளியிடுவோர் கடந்த ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் மௌனம் காக்கின்றனர் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆட்சிஆயுதம்சயனைட்தற்கொலை அங்கிபாதுகாப்பு அமைச்சுவடக்குஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment