மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தமது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.
மற்றொரு நான்காவது சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, கஜகஸ்தானின் ஜெரினா டயஸ் (ZERINA DIAS) எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் மரியா ஷரபோவா 6-4, 6-4 நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.