Designed by Iniyas LTD
விம்பிள்டன் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு செரீனா, ஷரபோவா முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தமது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.
மற்றொரு நான்காவது சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, கஜகஸ்தானின் ஜெரினா டயஸ் (ZERINA DIAS) எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் மரியா ஷரபோவா 6-4, 6-4 நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.