ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீரரான வாவ்ரின்கா, ஸ்பெயினின் வெர்டெஸ்கோவை (VERDESCO) எதிர்கொண்டார். இதில் வாவ்ரின்கா, 6-4, 6-3, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், 6-3, 6-3, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் டாமிக்கை வென்று, 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 6-4, 6-3 என்ற செட்களில் ரொமானியாவின் பெகுவை (BEGU) தோற்கடித்து, 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.