தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விம்பிள்டன் டென்னிஸ் : ஜோகோவிச், வாவ்ரின்கா மற்றும் ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

sharobovaலண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், வாவ்ரின்கா ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நான்காம் நிலை வீரரான வாவ்ரின்கா, ஸ்பெயினின் வெர்டெஸ்கோவை (VERDESCO) எதிர்கொண்டார். இதில் வாவ்ரின்கா, 6-4, 6-3, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், 6-3, 6-3, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் டாமிக்கை வென்று, 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 6-4, 6-3 என்ற செட்களில் ரொமானியாவின் பெகுவை (BEGU) தோற்கடித்து, 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Comments
Loading...