Designed by Iniyas LTD
O/L பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வருமாறு..
முதல் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் எஸ்.சத்சரணி ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தினை கொழும்பு நாலாந்தா கல்லூரியின் கே.கே சமல் புனசரட பெற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கான வெளியிடப்பட்ட சாதாரண தர பெறுபேறுகளின் படி மூன்றாவது இடம் இரு மாணவர்களை சென்றடைந்துள்ளது.
அது கொழும்பு தேவி மகளிர் வித்தியாலயத்தின் ஆர்.மலீனா ரத்னாயக்க மற்றும் கண்டி மஹாமாயா வித்தியாலயத்தின் இந்தீவரி உமயங்கா ரத்னாயக்க ஆகியோருக்குமாகும்.
மேலும் உங்கள் பெறுபெற்றை மொபைல் போன்களூடாகவும் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உங்கள் மொபைல் போன்களில்
EXAMS என ரைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு Index Number ஐ ரைப் செய்து,
Dialog எனில் 7777 என்ற இலக்கத்திற்கும்
Mobitel எனில் 8884 என்ற இலக்கத்திற்கும்
Airtel எனில் 7545 என்ற இலக்கத்திற்கும்
Etisalat எனில் 3926 என்ற இலக்கத்திற்கும்
Hutch எனில் 8888 என்ற இலக்கத்திற்கும்
SMS அனுப்புவதன் மூலம் உங்கள் கைகளில் தவழும் மொபைல் போன்களில் பரீட்சைப் பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.