Designed by Iniyas LTD
O/L பெறுபேறுகள் இம்மாத இறுதியில்!
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என ஸ்ரீலங்காவின் பரீட்சைகள் ஆணையாளர் என்.ஜே.புஸ்பகுமாரதெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள அவர், ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.