Designed by Iniyas LTD
அடடே நயன்தாராவின் குரலுக்கு நாயகி இந்த நடிகை தானா? – வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு படங்கள் வரிசையில் நிற்கின்றன, இவர் தற்போது அறம் படத்தில் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
மேலும் இவர் அதர்வாவுடன் நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த படத்தில் நயன்தாராவிற்காக நடிகையும் எப்.எம் நிகழ்ச்சி தொகுப்பாளருமான தீபா வெங்கட் தான் டப்பிங் பேசியுள்ளார், மேலும் இவர் நயன்தாராவின் பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளாராம்.
இவர் டப்பிங் பேசும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.