Designed by Iniyas LTD
அடை மழையிலும் குடையுடன்பயணம்,மோடி.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மலையகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அடைமழையிலும் குடையுடன் தளதா மாளிகைக்கு சென்றுள்ளனர்.
புத்தரின் புனித தந்தத்தாதுவை வணங்குவதற்காக இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து விட்டு நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தையும் முடித்துக்கொண்ட பிரதமர் தளதா மாளிகைக்கு சென்றுள்ளார்.