தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் டேரன் சமி

வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக டேரன் சமி சுமார் 6 ஆண்டுகளாக இருந்தார். இவர் தலைமையில் அந்த அணி இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வாங்கி அசத்தியது. ஆல் ரவுண்டராக திகழும் டேரன் சமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் போன் செய்து நீங்கள் கேப்டனாக செயல்பட முடியாது என்று தெரிவித்தார்.  Sammy

இதனால் நான் இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என்று சமி கூறியிருந்தார்.  இதற்கிடையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. முதல் போட்டி 27-ந்தேதியும், 2-வது போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த அணியின் கேப்டனாக கார்லோஸ் பிராத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

டேரன் சமியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின்போது கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தவர் பிராத்வைட்.  இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:  1.  அன்ட்ரே பிளெட்சர், 2. அன்ட்ரே ரஸல், 3. கார்லோஸ் பிராத்வைட், 4. கிறிஸ் கெய்ல், 5. வெயின் பிராவோ, 6. எவின் லெவிஸ், 7. ஜேசன் ஹோல்டர், 8. ஜான்சன் சார்லஸ், 9. கிரன் பொல்லார்டு, 10. லென்டில் சிம்மன்ஸ், 11. சாமுவேல்ஸ், 12. சாமுவெல் பத்ரி, 13. சுனில் நரைன்.

Comments
Loading...