தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்க உளவுத்துறை தகவலால் தீவிரவாத தாக்குதலை முறியடித்த ரஷ்யா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு ரஷ்ய உளவுத்துறை உதவியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில். இதற்காக விசாரணையும் நடந்து வருகின்றது. இதே போல் டிரம்ப் மற்றும் புதினுக்கு இடையிலான உறவில் சுமூக நிலையே காணப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ரஷ்யாவுக்கு தகவல் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் தீவிர சோதனை நடத்திய ரஷ்ய பாதுகாப்பு படையினர் 7 பேரை தீவிரவாதிகள் என கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் திட்ட வரைபடங்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை வெள்ளை மாளிகை மற்றும் ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...