தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்க வாழ் இலங்கையர்களால் ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இராணுவத்திற்கு வழங்கைவைப்பு…

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கருவிகள் அமெரிக்க வாழ் இலங்கையர்களால் வழங்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் காரணமாக நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றிக்கு ஒத்துழைப்பை வழங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றில் சேவையாற்றும் சேவகர்களின் வரவு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதோடு மக்களின் வாழ்வாதாரமும் பின்னடைந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதை நோக்காக் கொண்டு முப்படைகள் அனைத்து பிரதேசங்களிற்கும் பாதுகாப்பை வழங்கி வருவதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வாழ் இலங்கையர்களால் ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...