தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்கா மற்றும் தென் கொரிய தலைவர்களையும் சந்திப்பேன்: அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்துள்ள வடகொரிய அதிபர்

 

சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டு அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேசினார்.

அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். வடகொரியாவில் ராணுவ ஆட்சி நடக்கிறது.ராணுவத்தின் தலைவராக 2011ல் கிம் ஜாங் உன் பொறுப்பேற்றார்.

அதன்பின்னர், இவரே அந்நாட்டின் அதிபராகவும் ஆனார். அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளின் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ஏவுகணை சோதனையை, வடகொரியா தொடர்ந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனால் அமெரிக்கா – வடகொரியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தன.

ஆனால் சீனா மட்டும் வடகொரியாவுக்கு ஆதரவாக இருந்தது. இந் நிலையில் திடீர் பயணமாக, கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றார்.

தலைநகர் பீஜிங் வந்த கிம் ஜாங்கிற்கு, சீன அதிபர் ஜி ஜின் பிங் உற்சாக வரவேற்பு அளித்தார். இருநாட்டு அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையும் நடந்தது.

2011க்குப் பின், இருநாட்டு தலைவர்கள் இதுவரை சந்தித்ததில்லை. இது தான் கிம் ஜாங்கின் முதல் வெளிநாட்டுப் பயணம். இந்த ரகசிய பயணத்தால், அமெரிக்கவுக்கு ”செக்” வைத்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்.

அமெரிக்கா மட்டுமே ‘சூப்பர் பவர்’ அல்ல.

அமெரிக்கா மட்டுமே ‘சூப்பர் பவர்’ அல்ல என்பதை உணர்த்தியுள்ளார். இது குறித்து கிம் ஜாங் கூறுகையில், ”இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் தொடங்கிஉள்ளது. அடுத்து அமெரிக்கா மற்றும் தென் கொரிய தலைவர்களையும் சந்திப்பேன்” என்றார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மனைவி மற்றும் அதிகாரிகள் சிலருடன், கடந்த மார்ச் 25ல் ராணுவ ரயில் மூலம், சீன தலைநகர் பீஜிங் வந்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய வர சம்மதித்துள்ளதாக, வடகொரிய மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு குறித்து, ஏற்கனவே சீன அரசு தெரிவித்தது, என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

Comments
Loading...