தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் துப்பாக்கி உரிம கட்டுப்பாட்டை அதிகரிக்க முடிவு : அதிபர் ஒபாமா

obamaஅமெரிக்காவில், மக்களிடையே துப்பாக்கி பயன்பாட்டை குறைப்பதற்கான கட்டுப்பாடுகளை அதிபர் பராக் ஒபாமா கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளார்.

 வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், துப்பாக்கி உரிமத்திற்கான கட்டுப்பாட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒபாமா உரையாற்றினார். 2012-ம் ஆண்டு அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு பேசிக்கொண்டிருக்கும்போது, ஒபாமா கண்ணீர் விட்டு அழுதார்.

 சிகாகோவின் வீதிகளில் நாள்தோறும் துப்பாக்கி வன்முறை நடைபெற்று வருவதாக கவலை தெரிவித்த அவர், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதில் அமெரிக்க நாடாளுமன்றம் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் பின்புலங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

 அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதில் கட்டுப்பாடு விதிக்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத நிலையில், தனது அதிகாரத்தின் மூலம் அதனை செயல்படுத்த ஒபாமா முடிவு செய்துள்ளார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Comments
Loading...