தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமைச்­ச­ரவை மாற்­றத்­தால் தாமதமாகியுள்ள வடக்கு அபி­வி­ருத்தி திட்­டம்

அமைச்­ச­ரவை மாற்­றத்­தால் வடக்கு அபி­வி­ருத்தி திட்­டங்­கள் தாம­த­ம­டைந்­துள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

50 ஆயி ­ரம் வீடு­கள் அமைக்­கும் திட்­டம், வலி. வடக்­கில் மீளக்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளுக்­கான உத­வி­கள் வழங்­கல் போன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தி­லேயே  தாம­தம் ஏற்­பட்­டுள்­ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­களை அமைக்­கும் பணி ­
கள், ஜனாதிபதியின்  கீழி­ருந்த தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி ணக்க அமைச்­சால் முன்­னெடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஒப்­பந்­த­கா ரர்­க­ளைத் தெரிவு செய்­யும் பணி நிறை­வ­டைந்­தி­ருந்­த நிலையில்,.ஒப்­பந்­தம் கைய­ளிப்­ப­தற்கு அனு­மதி கோரி அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் முன்­வைக்­கப்­பட இருந்­தது.

தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்சு

 இந்நிலையில் . அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் போது, ஜனாதிபதியின்   கீழி­ருந்த தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்சு, அமைச்­சர் மனோகணே­ச­னின் அமைச்­சு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை வடக்கு அபி­வி­ருத்­திக்கு தனி­யான அமைச்­சும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் வடமாகாண   திட்டங்கள்  எந்த அமைச்சு ஊடாக   முன்­னெ­டுக்­கப்­ப­ட உள்ள்ளது  என்­பது இன்­ன­மும் தெரி­ய­வ­ர­வில்லை.

இதன் கார­ண­மாக, வடக்கு அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...