Designed by Iniyas LTD
அம்பாறை பெண் படுகொலைக்கு எதிரப்பு தெரிவித்து பாரிய போராட்டம்!
அம்பாறை – கல்முனை மாநகரில் பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து பெண்கள் அமைப்புக்களால் இன்று ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. கொலையாளிக்கு தகுந்த தண்டனையை சட்டம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கொலையாளிக்கு சட்டத்தரணி எவரும் முன்னிலையாவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கோரி, இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
தொடர்புடைய பதிவு
குறித்த பேரணியில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டதுடன், கொலையாளிக்கு எதிராக சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியானது கல்முனை சுகாதார பணிமனையின் முன் ஆரம்பமாகி மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியினூடாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினுள் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றினையும் கையளித்ததுடன் கொலையாளியின் உருவப்பொம்மையை எரியூட்டி எரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
