Designed by Iniyas LTD
Comments
Trending
கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்நிலையில் தற்போது சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அழைத்தால் பிரசாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அ.தி.மு.க. தலைமை மதுரை ஆதீனத்தை கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்றுமுன்தினம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மதுரை ஆதீனத்தை அவரது மடத்தில் சென்று சந்தித்து, அவரிடம் ஆசி பெற்றார்.
மதுரை ஆதீனம் இது தொடர்பில் தெரிவிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைச்சர் என்னிடம் ஆசி பெற வந்தார். தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆவலாக இருக்கிறேன். அ.தி.மு.க. தலைமைக்கழகம் அழைத்தால் பிரசாரத்துக்கு புறப்படத் தயார் என்றார்.
ஜெயலலிதாவிடமிருந்து தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஆதீனத்துக்கு அமைச்சர் மூலம் அழைப்பு வந்தி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.