தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரச படைகளிடமே எங்கள் பிள்ளைகளை நாங்கள் ஒப்டைத்தோம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் இலங்கை அரசபடைகள்தான் எங்கள் பிள்ளைகளை பிடித்தார்கள் இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியிலும் ஓமந்தை பகுதியிலும் வைத்து எங்கள் பிள்ளைகளை நாங்கள் அரச படைகளிடமே ஒப்டைத்தோம் என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

படையினர் தகங்களிடம் எவரும் சரணடைய வில்லை என தெரிவித்திருப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்கள். எங்கள் பிள்ளைகளை 2009 ஆம் ஆண்டு இலங்கை படையினரிடம் தான் ஒப்படைத்துள்ளோம் இது சகலருக்கும் தெரிந்த விடையம் இது ஜக்கியநாடுகள் சபையிடம் அனைத்து ஆவணங்களுடனும் உறுதிப்படுத்தியுள்ளோம் எவரும் மறுப்பு தெரிவிக்கமுடியாது ஆனால் அவர்கள் ஏதே ஒரு மறுப்பில் நிக்கின்றார்கள். ஆனால் நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு நிக்கின்றோம் எங்கள் பிள்ளைகளை இலங்கை அரசபடைகளிடம் தான் ஒப்டைத்தோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Comments
Loading...