Designed by Iniyas LTD
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்
சவுகார்பேட்டை ரமணன் சாலையில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பான்குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக யானை கவுனி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் போலீசார் நேற்று மாலை அந்த குடோனில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த பான்குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். தகவல் அறிந்ததும் குடோன் உரிமையாளர் ரமேஷ் குப்தா தப்பி ஓடி விட்டார். இது குறித்து யானை கவுனி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.