தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவுஸ்திரேலியா சிட்னியில் கைதான இலங்கை இளைஞர் பிணையில் விடுதலை…

அவுஸ்திரேலியா சிட்னியில் கைதான இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி மொஹமட் நிசாம்தீன்  என்கின்ற இலங்கை இளைஞர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சதி திட்டங்களை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படும் குறிப்பு புத்தகத்தில் இருந்த கையெழுத்துடன், அவரின் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதால் அவர்  விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்த அவரின் கணனியிலோ, கையடக்க தொலைபேசியிலோ எவ்வித தீவிர நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இல்லை எனவும்  தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த இளைஞர் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக கூறி  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...