Designed by Iniyas LTD
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : சென்னையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் உற்சாக வரவேற்பு
பள்ளி மாணவர்களுக்கிடையேயான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் சென்னை திரும்பினர்.
சீனாவில் வுகான் (WUHAN) நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் சென்னை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இவர்களில் கவுரி சங்கரி குண்டு எறிதலில் தங்கம் வென்றார். டிரிபிள் ஜம்ப் பரிவில் பிரியதர்ஷினி வெள்ளியும் , நந்தினி வெண்கலமும் வென்றனர். உயரம் தாண்டுதலில் விவேகானந்தன் வெண்கலம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்செல்வி வெள்ளி வென்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் ராமலட்சுமி வெண்கலம் வென்றார்.
இவர்கள் அடங்கிய இந்திய அணிக்கு அவர்களது பெற்றோர், சக மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.