Designed by Iniyas LTD
ஆப்கானில் தற்கொலைத்தாக்குதல்! 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீதே, இந்தத் தாக்குதல், இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டது. இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தோரின் எண்ணிக்கை 8 என, இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.