Designed by Iniyas LTD
ஆயுர் வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம்! மூவர் கைது
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை நேற்று முன்தி னம்(வெள்ளிக்கிழமை) இரவு சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 3 பெண்க ளை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் 28, 31 மற்றும் 41 வயதானவர்கள் எனவும் இவர்கள் மொறட்டுவ, அனுராதபுரம் மற்றும் பிலியந்தல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன், குறித்த விபச்சார விடுதியினை நடத்திவந்த நபரும் கைது செய்ய ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலி ஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.