Designed by Iniyas LTD
ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் ஊடகவியலாளர் கீத் நொயார் கொழும்பில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் ஆறு பேரையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் முடியும் வரையில், சிறிலங்கா இராணுவம் இவர்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி வைத்திருக்கிறது.