Designed by Iniyas LTD
இங்கிலாந்தின் மிரட்டல் பந்துவீச்சால் அவுஸ்திரேலிய அணி திணறி வருகிறது
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் மிரட்டல் பந்துவீச்சால் அவுஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
கடைசியாக நடந்த லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. பெர்த்தில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மார்கன் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின்ச் டக்–அவுட் ஆனார். ஆண்டர்சன் வேகத்தில் வார்னர் (12) வெளியேறினார். பின்னர் வந்த அணித்தலைவர் பெய்லியும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுமித்தும், மேக்ஸ்வெல்லும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுமித் 40 ஓட்டங்களில் நடையைகட்டினார்.
தற்போது மேக்ஸ்வெல் (31), மிட்செல் மார்ஷ் (3) விளையாடி வருகின்றனர். 23 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்கள் எடுத்துள்ளது.