தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய இராணுவ வீரர்கள் 13 பேர் நேபால் மக்களால் சிறைப்பிடிப்பு

nepal-constitution-protests-kathmandu_29a5be7d-4a6e-11e5-a8da-005056b4648eஇந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 13 பேர் நேபாள எல்லையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைப்பாதுகாப்பு படை டி.ஜி பி.டி.ஷர்மா இதனை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட வீரர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படையை சார்ந்த உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“எல்லை தாண்டி கொள்ளையர்களை விரட்டிச் சென்ற போது இந்திய பாதுகாப்பு படையினரை நேபாள மக்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை நேபாள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நேபாள எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் நுழைந்து நேபாளிகள் 4 பேரை சுட்டுக் கொன்றதாக நேபாள அரசு குற்றம்சாட்டியதோடு, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு இந்தியாவை வலியுறுத்தியது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு தெரிவித்தது.

நேபாளத்தின் இந்திய எல்லையில் மாதேசி மக்களின் தொடர் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்திய வீரர்கள் அத்துமீறுகிறார்கள் என்ற நேபாளத்தின் குற்றச்சாட்டு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளத

Comments
Loading...