Designed by Iniyas LTD
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு கங்குலி ஆதரவு
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் கங்குலி கூறியதாவது:- ”இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்க இருநாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் உடனான தொடருக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. இருப்பினும் தொடர் நடப்பதை தீர்மானிக்கும் காரணிகள் பல உள்ளது” என்றார்.
ஆஸ்திரேலியா உடனான டி20 தொடருக்கான அணியில் யுவராஜ் சிங் மற்றும் ஆசிஷ் நெஹ்ரா தேர்வு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த கங்குலி, “வயதினை விட ஆட்டத்தின் திறன் தான் முக்கியமானது.” என்று தெரிவித்தார். மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அதனால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கங்குலி கூறினார்.