Designed by Iniyas LTD
இந்தியா: பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யா பயணம்
பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா செல்கிறார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சீன பிரதமர் ஜி ஜிங்பிங்கை நரேந்திர மோடி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் உஃபா நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும், தஜிகிஸ்தான் நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.