தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

parliament1நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு, எதிர்கட்சிகளின் ஒத்துழைப் பெற இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 அதேவேளையில், சகிப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 ஆனால், நாடாளுமன்ற அலுவல்களை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்டவற்றை எழுப்பி, மழைக்கால கூட்டத் தொடரை எதிர்கட்சிகள் முடக்கின.

Comments
Loading...