Designed by Iniyas LTD
இன்று உலக தபால் தினம்!
இலங்கை உள்ளிட்ட 193 நாடுகளில் உலக தபால் தினம் அக்டோபர் 9ஆம் திகதி சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. 1874ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி 122 நாடுகள் சேர்ந்து சுவிட்ஸர்லாந்தின் பேர்ன் நகரில் உலக தபால் தினத்தை கொண்டாடியது.
1877 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் உலக தபால் சங்கம் முதன்முறையாக ஒன்று கூடியது. அந்தவகையில் இலங்கையின் கரையோர பகுதிகளில் முதன் முறையாக ஐந்து தபால் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. 1799 ஆம் ஆண்டு இலங்கை தபாலுக்கான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட தபால் கட்டணம் அறிவிக்கப்பட்டது. 1832ஆம் ஆண்டு ஆசியாவின் தபால் துறைக்கு முன்னோடியாக இலங்கை தபால் சேவை காணப்பட்டது. இன்றைய நவீன யுகத்திலும் தபால் துறையின் சேவை அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.