Designed by Iniyas LTD
இன்றைய இராசிபலன்கள் …
மேக்ஷம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த இலாபம் குறையலாம்.
ரிக்ஷபம்
இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர்ப் பிரச்சினை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து உண்டாகலாம். கணவன்- மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.
மிதுனம்
இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும்.
கடகம்
இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போலிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எந்தவொரு வேலையிலும் முழுக் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
சிம்மம்
இன்று எந்தக் காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். எந்த வேலையிலும் முழுக் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் விலகும்.
கன்னி
இன்று புதிய நபர்களின் நட்புக் கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். தீ, எந்திரம் ஆகியவற்றைக் கையாளும்போது கவனம் தேவை.
துலாம்
இன்று குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.
விருட்சிகம்
இன்று பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரியத் தாமதமும் உண்டாகும். புதிய நட்புக்கள் கிடைக்கும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.
தனுசு
இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள்ளிருக்கும். எதிர்பார்த்த இலாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்திலிருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும்.
கும்பம்
இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. புதன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் நன்மையைத் தரும்.
மீனம்
இன்று தொழில் வியாபாரத்திலிருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். இலாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையாகச் செயற்பட்டுச் சாதகமான பலன் காண்பார்கள்.