Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
செயலில் குளறுபடி வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.
ரிஷபம்:
நற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படலாம்.தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும்.
மிதுனம்:
நண்பர் உங்களிடம் அன்பு பாராட்டுவார் .தொழில் வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.
கடகம்:
அனுபவ அறிவு வளர்ச்சிக்கு கைகொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க வாய்ப்பு வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்:
ஞாபக மறதியால் பணி தாமதம் ஆகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவு ஓரளவு கிடைக்கும்.
கன்னி:
பேச்சு செயலில் நிதானம் பின்பற்றவும். குடும்பத்தினர் ஆதரவு மனப்பாங்குடன் செயல்படுவர். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் விடாமுயற்சி தேவைப்படும்.
துலாம்:
சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். நிலுவைப் பணம் வரவாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்:
அறியாதவர்களிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும்.
தனுசு:
மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.
மகரம்:
குடும்ப சிரமத்தால் மனம் பாதிக்கலாம். பழைய அனுபவம் தந்த படிப்பினை மறக்காமல் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும்.
கும்பம்:
நேர்த்தியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும்.
மீனம்:
எளிதான பணி கூட சுமை போல தோன்றும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கை அளிக்கும்.