Designed by Iniyas LTD
இராணுவ அதிகாரியை அழைக்காததால் ஆசிரியர்களை தடுத்த இராணுவம்?
கிளிநொச்சி திருவையாறுப் பகுமியில் நேற்றைய தினம் முன்பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு இராணுவ அதிகாரியை அழைக்க வில்லை என்பதற்காக திறப்பு விழாவிற்கு செல்ல விடாது முன்பள்ளி ஆசிரியர்களை இராணுவ அதிகாரியினால் தடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுப் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கம் ஒன்றின் ஆளுகையில் இயங்கும் முன் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்களிற்கு இராணுவத்தினரின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஊதியம் வழங்குகின்றது.
குறித்த முன்பள்ளிக்கு இதுவரை காலமும் ஓர் நிரந்தரக் கட்டிடம் கிடையாது. தற்போது யு.என்.கபிடாஸ் நினுவனத்தின் நிதிப் பங்களிப்பில் ஓர் நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழாவிற்காக நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கட்டிடத் திறப்பு விழாவிற்காக மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அழைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்பள்ளிகளிற்கான இணைப்பாளரும் அழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் சார்பில் அதன் பொறுப்பு வாய்ந்த இராணுவ அதிகாரியினை அழைக்குமாறு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அழுத்தம் கொடுத்திருந்த்து.
மேற்படி திறப்பு விழாவில் ஓர் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பங்கு கொள்வதில் ஆட்சேபனை தெரிவிக்காத நிதிப் பங்களிப்பு தாரர்ஏனைய அரசியல் வாதிகளோ அல்லது இராணுவ தரப்போ கலந்து கொள்வது பொருத்தமற்றது. எனவும் தெரிவித்ததற்கமைய கிராம அபிவிருத்திச் சங்கம் இராணுவ அதிகாரியை அழைக்கவில்லை.
இதனால் ஆத்திரமுற்ற சிவில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி முன்பள்ளியில் பணிபுரியும் தமது சம்பளம் பெறுகின்ற இரு ஆசிரியர்களையும் குறித்த நிகழ்விற்கு செல்ல விடுது தடுத்துள்ளார்.
இதன் பிரகாரம் நேற்றைய திறப்பு விழா ஆசிரியர்கள் இன்றியே இடம்பெற்றமையினால் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோரும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் தமது அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
எமது கிராமத்தின் நிகழ்விற்கு யாரை அழைப்பது என்பதனை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த இராணுவத்தை நம்பி நாம் பிள்ளை பெறவில்லை. பெற்ற பிள்ளைகளை கற்பிக்கும் வழி எமக்கும் தெரியும்.
இந்த வழி இல்லையேல் மாற்று வழியினை நாம் உருவாக்குவோம். அதற்காக இராணுவம் எம்மை நிர்ப்பந்திக்கக் கூடாது என கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.