Designed by Iniyas LTD
இராமேஸ்வரம்-தலைமன்னார் தரைவழித்தொடர்புக்கு கோரிக்கை!
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு தமிழக தொழில்முனைவோர் வேண்டுகோள் விடுத்தபோதிலும் உடனடியாக பலாலி சென்னை விமான சேவையினையும் தூத்துக்குடி காங்கேசன்துறை கப்பல் சேவையினையும் ஆரம்பிக்கலாம் என யாழ் வர்த்தகர்களும் கருத்துரைத்தனர்.
கடந்த 27ஆம் திகதி யாழ் நகரசபை மைதானத்தில் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், 65 சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன.
இஅவ்வாறு வருகைதந்த சர்வதேச வர்த்தகப் பிரதிநிதிகளிற்கும் குடாநாட்டின் வர்த்தகப் பிரதிநிதிகளிற்கும் இடையில் இடம்பேற்ற பேச்சுக்களின்போதே மேற்படி கோரிக்கைகள் முன்வைக்கப பட்டுள்ளது. இதன்போது பேசிய சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை-இந்திய வர்த்தக உறவுக்கு தரைவழித் தொடர்பு மிக முக்கியம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
வர்த்தக முயற்சிகளை மேம்படுத்தவும் முதலீடுகளை அதிகரிக்கவும் சிறந்த போக்குவரத்து வசதிகள் மிக முக்கியம். எமது வர்த்தகப் பொருட்களை கொழும்புக்குக் சேர்ப்பதிலேயே சில சிரமங்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி, கொழும்பில் இருந்து அவற்றை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது. இதனாலேயே பல சர்வதேச நிறுவனங்கள் யாழ்ப்பாணத்துடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தத் தயங்குகின்றன.
இவற்றைத் தவிர்க்கும் முகமாக, இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தால், வர்த்தக உறவுகள் மட்டுமன்றி, சர்வதேச முதலீடுகளும் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்படலாம். மேலும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுவதற்கு வழங்கப்படும் இடைத்தரகுக் கூலி தவிர்க்கப்படலாம் என்பதால், பொருட்களைக் குறைந்த விலைக்கு யாழில் விற்பனை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இது குறித்து யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் தரைவழிப் பாதை தொடர்பினில் கவனம் செலுத்துவது நீண்ட கால அடிப்படையிலானது. ஆனால் உடனடியானதும் இலகுவானதாகவும் கானப்படும் இருவழிகள் தொடர்பினில் அதிக கவனம் செலுத்தலாம் அதாவது பலாலி சென்னை விமானசேவை மற்றும் தூத்துக்குடி காங்கேசன்துறை இடையிலான கப்பல்சேவை என்பனவற்றை ஆரம்பிப்பதானால் அதிக செலவும் இன்றி நீண்ட காலமும் இன்றி உடனடியாகவே ஆரம்பிக்கவும் முடியும் .
இவ்வாறு குறித்த இரு சேவைகள் ஆரம்பிக்கப்படுவதன் மூலமும் சர்வதேச முதலீட்டாளர்களின் கோரிக்கை நிவர்த்தி செய்ய முடியும் என்பதோடு எமது உள்ளூர் இளைஞர்களிற்கான வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.