தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள போர்ச்சுகல் அணி

15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில், லயன் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, ஆஸ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.  ronal

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றும் இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. இரண்டாவது பாதியின் 50வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.   இதனை தொடர்ந்து, 53வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி வீரர் நானி தனது அணிக்காக இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். வேல்ஸ் அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு, இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.   முடிவில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் அணி ஐரோப்பிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. போர்ச்சுகல் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் நான்கு ஐரோப்பிய சாம்பியன் தொடரிலும் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை முன்னாள் வீரர் பிளாட்டினியுடன் பகிர்ந்து கொள்கிறார். இதுவரை கலந்து கொண்ட 4 தொடர்களில் சேர்த்து மொத்தம் 9 கோல்கள் அவர் அடித்துள்ளார்.   முன்னதாக, உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணி, லீக் ஆட்டங்களில் ஐஸ்லாந்து (1-1), ஆஸ்திரியா (0-0), ஹங்கேரி (3-3) ஆகிய அணிகளிடம் டிரா கண்டது.

2-வது சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவையும், கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் உலக சாம்பியன் ஜெர்மன், தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

Comments
Loading...