தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் டுபாயில் கைது- அச்சத்தில் இலங்கை அரசியல்வாதிகள்…

இலங்கையில் தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகதுரே மதுஷ் உட்பட 25 பேர் நேற்றைய தினம் டுபாயில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து செல்ல  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

மாகதுரே மதுஷ் வெளிநாடுகளில் இருந்து பாரிய தொகை ஹெரோயினை  இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் பல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இவர் செயற்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவரின் கைதின் பின்னணியில் பல அரசியல்வாதிகளின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில்  இந்த  அதிரடி கைதினைத் தொடர்ந்து இலங்கை அரசியல்வாதிகள் பலர் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்[பிடத்தக்கது.

Comments
Loading...