Designed by Iniyas LTD
இலங்கையுடன் நிலையான இராணுவ உறவுகளை பேண சீனா விருப்பம் – சான் வங்குவான்
இலங்கையுடன் நிலையான இராணுவ உறவுகளை பேணிவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் சான் வங்குவான் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கவும் சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் சான் வங்குவான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடன் தொடர்ந்தும் இருக்கமான உறவுகளைப் பேணிவருவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் எதிர்காலத்தில் இராணுவ ரீதியில் ஆழமான அபிவிருத்தியையும் பேச்சுக்களையும் நடத்தவும் விருப்பம் வெளியிட்டுள்ளார்.