தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இவர்களா பயங்கரவாதிகள்..? கொழும்பில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம்

ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகங்கள் சொல்லில் அடங்க முடியாதவை. அதிலும் தாய் நாட்டின் விடிவிற்காக கரும்புலிகள் செய்த தியாகங்கள் உலகில் எதனோடும் ஒப்பிட முடியாது. அதிலும் முகவரியில்லாமல் சிங்கள தேசத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அந்த கரும்புலி மறவர்கள் என்றுமே மறக்க முடியாதவர்கள்.

இன்று கரும்புலிகள் நாள். புலிகளின் காலத்தில் ஈழம் அவர்களை வெகு சிறப்பாக நினைவு கூறும் நாள். ஆனால் இன்று ஈழத்தில் சூழ்நிலையால் தற்காலிகமாக நினைவு கூற முடியாத நிலை.

இந்த வீர மறவர்களின் நினைவு நாளில் கொழும்பில் நடந்த ஓர் உண்மைச்சம்பவத்தினை நினைவு கூறுவது சிறப்பாக இருக்கும்.

1998 காலப்பகுதி அது. அப்போது கொழும்பில் தமிழர்களை படுகொலை செய்த சில இராணுவத் தளபதிகள்,புலனாய்வாளர்கள் சிலர் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர். அதற்காக கொழும்பு சென்ற மறைமுக கரும்புலிகள் அங்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்தனர். அதில் ஒரு கரும்புலி வீரர் கொழும்பு பேருந்து நிலையத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது அங்கு வீதி கண்காணிப்பில் இருந்த ஸ்ரீலங்கா காவல்துறையினர் இவரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

அந்த கரும்புலி வீரரும் அருகில் சென்றபோது அவரிடம் விசாரித்து விட்டு உடலை பரிசோதிக்க வேண்டும் என கூறியதும் அந்த கரும்புலி வீரர் உடனடியாக அந்த காவல்துறையினரை தள்ளி விட்டு அந்த இடத்தை வெட்டு ஓடுகிறார்.

அது பிரதான பேருந்து தரிப்பிடம் என்பதால் பெருமளவான மக்கள் உள்ள இடம். காவல்துறையினர் அவரை கைது செய்ய பின்னால் துரத்திக்கொண்டு செல்கின்றனர். ஆனால் அவர் அந்த இடத்திலிருந்து மக்கள் நடமட்டம் குறைந்த இடத்துக்கு சென்று விடுகிறார். போலீசாரும் அவரை நிற்குமாறும் இல்லையெனில் சுடுவோம் என கூறியபடி பின்னால் துரத்திச் செல்கின்றனர்.அதோடு விசேட அதிரடிப்படையினரும் அந்த இடத்துக்கு வந்து விடுகின்றனர்.

அந்த கரும்புலி வீரர் தப்பிச் செல்ல வழி இல்லை. கொழும்பு ஒரு வர்த்தக நகரம் என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருக்கும்.  அந்த கரும்புலி வீரர் இரகசியத்தை காப்பதற்காக தன்னை அழிப்பதை தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் ஒரு மதிலுக்கு பின்புறம் பாய்ந்து வெடித்து தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார்.

அங்கிருந்த மக்களும் இராணுவமும் திகைத்து விட்டனர். அந்த கரும்புலி மறவர் சிங்களவர்கள் தானே என நினைத்திருந்தால் மக்கள் செறிவான இடத்தில் வெடித்துச் சிதறி மக்களையும் அழித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மக்களுக்கு எந்த சேதமும் வராமல் தன்னைத்தனே அழித்துக் கொண்டார். இது அந்த சம்பவத்தை பார்த்த ஸ்ரீலங்கா காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை அத்துடன் அங்கு நின்ற மக்களுக்கே தெரியும். இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வீரகேசரி மற்றும் சிங்கள, ஆங்கில நாளிதழில் வெளிவண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்றுமே விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழர்களை இலக்கு வைத்து தாக்கி படுகொலை செய்ததை இன்று உலகமே அறிந்து கொண்டது. அதனால் தான் ஐ நா வால் கூட புலிகளை போற்குற்றவாளிகளாக குற்றம் சுமத்த முடியவில்லை.

இந்த வீர மறவர்களின் தியாகங்கள் என்றுமே வீண் போகாது என்பது உறுதி..

நன்றி – தர்சன்

Comments
Loading...