Designed by Iniyas LTD
ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் முறியடிப்பு! அமெரிக்கா
ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் மேற்கொள்ளப்ப்பட்ட பாரிய தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுப்படையணிகள் மற்றும் வானூர்தி தாக்குதல் உதவியுடன் குருதிஸ் படையினர் முறியடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் வட நகரமான மௌசூரியில் உள்ள பல நிலைகளை குறி வைத்து இந்த பாரிய தாக்குதல் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஆரம்பமான இந்த தாக்குதல் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த தாக்குதலில் இதுவரை ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் 180 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முதல் மைசூர் நகரம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலத்தில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் எதிர்கொண்ட பாரிய தாக்குதல் இதுவென அமெரிக்க இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.