தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழ அகதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

tamil-refugees-boat-2-450x253துப்பாக்கி சூட்டை நடத்தி, இலங்கை அகதிகளின் உயிர்களுக்கு ஆபத்தை உணர்த்தி அவர்களை படகுகளுக்குள் தள்ளிய இந்தோனேசிய அதிகாரிகளின் நடவடிக்கையானது, சர்வதேச நீதியை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் தந்திரோபாயங்களை நிறுத்தி, அகதிகளை படகில் இருந்து இறக்கி, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்திக்கசெய்யவேண்டும்.

சர்வதேச மன்னிப்புசபையின் தென்னாசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோசெப் பெனேடிக்ட் இதனை கூறியுள்ளார்.

அகதிகளை சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் பெனேடிக்ட் தெரிவித்துள்ளார்.

படகில் இருக்கும் ஐந்து பெண்கள், படகில் இருந்து குதித்து கரைக்கு செல்ல முயன்றபோதே அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் ஆகாயம் நோக்கி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்தோனேசிய உதவி ஜனாதிபதியின் உத்தரவை மீறி அச்சே மாகாண அதிகாரிகள், அகதிகளின் படகை திருத்தம் செய்தும், அவர்களுக்கு உணவுகளை வழங்கியும் அவர்கள் சர்வதேச கடலில் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Loading...