Designed by Iniyas LTD
ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை அவசியம்: பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமி
திருப்பூரில் நடக்க உள்ள திராவிட இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழம் அமைய வேண்டும் என்பதே மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பு. தமிழர்கள் தன்மானத்துடன் வாழ தமிழீழம் உருவாக வேண்டும். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு உலக நாடுகள் ஐ.நா.வுக்கு அழுத்தம் தர வேண்டும். தமிழர்களை கொன்று குவித்தவர்களே விசாரணை நடத்த வேண்டும் என்றால் எந்த விதத்தில் நியாயம். இலங்கை தமிழர்களுக்கு அவர்களது பூமி கிடைக்க சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.