Designed by Iniyas LTD
உச்சகட்ட பயத்தில் வட கொரிய அதிபர்..
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிங்கப்பூரில் தான் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில ஆண்டுகளாக ஏவுகணை சோதனை நடத்தி வந்தார்.
இந்த அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா சபையில் வடகொரியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தன.
அதனை அடுத்து தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்றது,
இது நிகழ்வு இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வித்திட்ட நிலையில், அணு ஆயுதங்களை அழிக்கும் முயற்சிக்கு கிம் ஜாங் உன் ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி, சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பேசவுள்ளனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் வைத்து தான் கொலைசெய்யப்படலாம் என வட கொரிய அதிபர் திடீர் அச்சம் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.