Designed by Iniyas LTD
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க கேழ்வரகு இட்லி
ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது. உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள கேழ்வரகு, வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாகும். இதனை கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 2 கப்
உளுத்தம் பருப்பு – 3/4 கப்
உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை
உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 – 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுத்தால் இட்லி ரெடி