தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உபெர் ’கால் டாக்ஸி’ நிறுவனத்திற்கு 1 கோடி அபாரதம்

பிரான்ஸ் நாட்டில் சட்ட விதிகளை மீறி இயங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட உபெர் ’கால் டாக்ஸி’ நிறுவனத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் ரூ.1 கோடி அபாரதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.car

சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் உபெர்(Uber) கால் டாக்ஸி நிறுவன ஓட்டுனர்கள் பல்வேறு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தின. பிரான்ஸ் நாட்டில் உபெர் கால் டாக்ஸிகள் செயல்படுவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புயது மட்டுமின்றி, பெரும் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு சட்ட விதிகளை பின்பற்றாமல் உபெர் நிறுவனம் செயல்பட்டு வருவதாக நீதிமன்றம் மீது வழக்கு தொடக்குப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதம் அண்மையில் நீதிமன்றத்திற்கு வந்தபோது, உபெர் சட்டவிதிகளை பின்பற்றவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, உபெர் நிறுவனத்திற்கு 80,000 யூரோ(1,31,53,090) அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், உபெர் நிறுவனத்தின் ஐரோப்பா மற்றும் ஆசிய தலைமை நிர்வாகிகளான Pierre-Dimitri Gore-Coty என்பவருக்கு 30,000 யூரோவும் மற்றும் ThibaudSimphal என்பவருக்கு 20,000 யூரோவும் அபாரதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Comments
Loading...