தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகின் மிக வயதான பெண்மணி- கின்னஸ் உலக சாதனை

 

ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி, உலகின் மிக வயதான பெண்மணியாக, கின்னஸ் உலக சாதனை குழுவினரால் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள ஃபுகுஓகா(Fukuoka) நகரில் வசிக்கும், காநே டானாகா (Kane Tanaka) என்ற 116 வயது மூதாட்டி வசித்து வருகிறார். 1903ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் தேதி பிறந்த மூதாட்டி, கடந்த ஜனவரி மாதம் 116ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை குழு, ஜப்பான் பாட்டி டானாகா-வை(Tanaka) உலகின் மிக வயதான பெண்மணி என அறிவித்திருக்கிறது.

இதற்கான நிகழ்ச்சியில், தனது குடும்பத்தினர் புடைசூழ, மூதாட்டி கலந்து கொண்டார். நகரும் நாற்காலியை பிடித்தவாறு, தாமே நடந்து செல்லவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கின்னஸ் உலக சாதனை குழுவினரிடமிருந்து சான்றிதழை பெற்றுக்கொண்ட 116 வயதான மூதாட்டி டானாகா,(Tanaka) கேக் வெட்டி, மற்றவர்களுக்கு அளித்தும், தாமும் உண்டு மகிழ்ந்தார்.

Comments
Loading...