தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊழல் செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை –குஷ்பு

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்காக செயல்படவில்லை என்று குற்றம்சாட்‌டினார்.kushboo

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, ஊழல் செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, அதனை கட்சி மேலிடமே முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார். மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Comments
Loading...