தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊழியர்களை நியமனமாக்கப்படாவிடின் மின்சார சேவை முடக்கப்படும்

நிரந்தரமாக்கப்படாத அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்காவிடில் நாட ளாவிய ரீதியில்  மின்சார சேவை  முடக்கப்பட்டு  மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென இலங்கை மின்சாரசபை ஊழியர்சங்க தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  , இலங்கை மின்சார சபை   ஊழியர் சங்க தொழிற்சங்கத்தினால்  யாழ்ப்பாணம் றிம்மா மண்டபத்தில் மின்சாரசபையின் வடமாகாண ஊழியர்களுடனான சந்திப்பு ஓன்று இன்று காலை பத்தரை மணியளவில் இடம்பெற்றது.  min

இச்சந்திப்பின் போதே  இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கச் செயலாளர் ரஞ்சன் ஜெயலத்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அங்கு  அவர் தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையில்,   இலங்கை மின்சார சபையில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படாமல் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவதாக தற்போதைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் அவர்அளித்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டங்களால் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2344 ஊழியர்களை நிரந்தரமாக்கினர். மிகுதி ஊழியர்களை 2016ஆம் ஆண்டு யூன் மாதம் நிரந்தரமாக்குவோம் என்று கூறினர்.  பின்னர் ஆகஸ்ட் மாதம் என்றார்கள் தற்போது ஓக்டோபர் 17ம் திகதி நிரந்தரமாக்குவோம் எனக் கூறினர். ஓக்டோபர் 17ஆம் திகதி அரசு கொடுத்த வாக்குறுதியின்படி நிரந்தரமாக்காவிடில் மேலும் ஓருநாள் கூட நாம் பொறு த்துக்கொள்ளமாட்டோம்.இலங்கையிலுள்ள அனைத்து மின்சார சபைக ளும் மூடப்பட்டு அனைத்து ஊழியர்களும் கொழும்பில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் முன்னெடுப்போம்.   இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையை தனியார்மயப்படுத்த முயற்சி செய்து வருகின்றது.

இதேவேளை நிரந்தரமாக்கப்பட்ட ஊழியர்களையும் 15, 20 வருடங்களாக வேலை செய்வோர்களையும் நீக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. உலக வங்கியும், அனைத்து உலக நிதி நிலையங்களும் இக்கொள்கையையே கொண்டுள்ளன.இதையே இலங்கை அரசும் பின்பற்றி வருகின்றது. நவீன முறைகளில் மின்மானி வாசிப்புக்கள் மேற்ள்ளகொள்ளவிருப்பதால் மின்மானிப் பரிசோதகர்கள் தேவையில்லையென அரசு கூறிவருகின்றது.  இலங்கை மின்சாரசபை மாத்திரமல்ல சுங்கத் திணைக்களங்கள், பெற்றோலிய கூட்டுத்தாபனங்கள், இறைவரித் திணைக்களங்கள், கலால் திணைக்களங்கள் போன்றவற்றையும் தனியார்மயப்படுத்தி ஊழியர்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

தனியார் மருத்துவ  கல்லூரிகளை உருவாக்கி தரமற்ற மருத்துவர்களை உருவாக்க திட்ட மிட்டுள்ளனர்.   எனவே ஓக்டோபர் 17ஆம் திகதி எமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் அரசுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் இலங்கையிலுள்ள முழு மின்சார சபைகளும் மூடப்பட்டு கொழும்பில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இதற்கு இலங்கையிலுள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களுக்கும் அழை ப்பு விடுவதாக தெரிவித்துள்ளார்.

Comments
Loading...