Designed by Iniyas LTD
எதிரணி வீரரரை தாக்கியதால் ரொனால்டோவிற்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை
லாலிகா கால்பந்து போட்டியின் போது எதிரணி வீரரரை தாக்கிய ரியல் மேட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கோர்டோபா அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் விளையாடியா ரியல் மேட்ரிட் வீரர் ரொனால்டோ கோல் எல்லையில் வைத்து கோர்டோபா வீரர் எடிமரின்முகத்தில் தாக்கினார். இதனால் இரு அணிகளின் வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் ரொனால்டோவை நடுவர் அல்ஜென்டரோ ஹெர்னான்டஸ் சிகப்பு அட்டை காண்பித்து எச்சரித்து மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இதையடுத்து ரொனால்டோ தம்முடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அவர் ரியல் சோசிடாட் மற்றும் செவில்லா அணிகளுடன் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க லாலிகா கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.